கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான வானவில் மன்றம் சிறார் திரைப்பட போட்டிகள் நடைப்பெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்றம், சிறார் திரைப்பட போட்டிகள் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கான போட்டியை தலைமை ஆசிரியர் பழனிவேல் தொடங்கிவைத்தார்.வானவில் மன்றம் சார்பில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான போட்டிகள் சிறுதானிய வகைகள் தொடர்பாக அறிவியல் செயல்முறை,செயல் திட்டம், தனிநபர் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

அதுபோல 6 முதல் 9 வகுப்பு வரை சிறார் திரைப்பட போட்டிகள் நிலா, ஈட்டி உள்ளிட்ட படங்களில் இருந்து போட்டிகள் நடைபெற்றது.வானவில் மன்றம் சார்பில் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் பல்வேறு வகையான சிறுதானிய உணவுகளை பயன்படுத்தி செயல்முறை மூலம் விளக்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டு மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.  போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் அன்பழகன்,  போட்டி ஏற்பட்டாளராக மேற்பார்வையாளர் பிரகாஷ்  ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரி, இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் செயல்பட்டனர். நடுவர்களாக  வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு முத்துக்குமார், ஆசிரியர்கள் மணிகண்டன் , பழனிச்சாமி, சோமசுந்தரம், காளியம்மாள் ராஜேந்திரன் ஆனந்தராஜ் , ராஜமாணிக்கம் ,தவச்செல்வம், புவனேஸ்வரி, வானவில் மன்ற கருத்தாளர்கள் தெய்வீக செல்வி, வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.