புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நரிக்குறவர் மக்களுக்கு தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சாவூர் திருமண்டலம், உறையூர், திருச்சி தூய பவுல் ஆலயத்தின் ஆயர் மணிமாறன் தலைமையில் திருச்சபை மக்கள் குழுவாக வந்து 70 நக்குறவர் குடும்பங்களுக்கு தலா 1குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தஞ்சாவூர் தூய பேதுரு ஆலய ஆயர் ஜேம்ஸ்பால், உதவி ஆயர் ஜெபராஜ் புருஷோத்தமன், பொருளர் மைக்கேல் மகேஷ் மற்றும் திருச்சி ஜெயக்குமார் மற்றும் கெளரவ ஆயர்கள் பங்கு கொண்டனர், பொருட்கள் அனைத்தும் உறையூர் சி. எஸ் ஐ, தூய பவுல் ஆலயத்தின் மூலமாக வழங்கப்பட்டது, இதில் கந்தர்வகோட்டை சமூக சேவகர் எட்வின் முன்னிலை வகித்தார்.