கந்தர்வகோட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் 2020-21, 2021-22ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை நடைபெற்றது.

இந்த அறிக்கையை சமர்ப்பிக்க சிறப்பு கிராமசபை கூட்டம் சிவன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு மூத்தகுடிமகளான இந்திரா நகர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வைத்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வள அலுவலர் அப்துல் காதர் ஜெய்லானி கலந்து கொண்டார். தணிக்கை அலுவலர் அந்தோணியம்மாள் அறிக்கையை வாசித்தார்.

இந்த ஊராட்சியில் சில தவறுகள் நடந்துள்ளது. அதை சரி செய்து கொண்டு சம்பந்தப்பட்டவரிடம் வசூல் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். இந்த பணியானது உங்கள் ஊரை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய திட்டம். நீங்கள் முறையாக வேலை செய்து முழு ஊதியத்தை பெற முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =