புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது, இந்த நிகழ்விற்கு கந்தர்வகோட்டை நகரத் தலைவர் ஷேக் முகமது தலைமை வகித்தார், தொகுதி தலைவர் ரபிக் முகமது வரவேற்புரை ஆற்றினார்.
இதில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை எஸ் டிபிஐ தொழிற்சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் முகமது பாரூக் மற்றும் கந்தர்வகோட்டையின் திமுக ஒன்றியச் செயலாளர்கள் பரமசிவம், தமிழ் ஐயா நகரச் செயலாளர் ராஜா ஜானகிராமன், ஆத்மா சேர்மன், ராஜேந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழுத் தலைவர் ரத்தினவேல் என்ற கார்த்திக் மழவராயர், அம்மா பாசறை அருண் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஜமாத் நிர்வாகிகளும் சமுதாய தலைவர்களும் பொது மக்களும் மகளிரும் திரளாக கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும்நிகழ்வை சிறப்பாக நடத்தினர், முடிவில் நகரச் செயலாளர் முகமது அன்சாரி நன்றியுரை ஆற்றினார்.