கந்தர்வகோட்டையில்  ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ரெ.ரத்தினவேல் மழவராயர் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மா. சின்னதுரை கலந்து கொண்டார், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர்  த.திலகவதி முன்னிலை வகித்தார்.

கந்தர்வகோட்டை ஒன்றிய குழுவின் 18 வது சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது, இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் கார்த்திக் மலவராயர் தலைமை வகித்தார்,  இந்த சிறப்பு கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் வட்டாட்சியர் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,  கூட்டத்தில் துவார்  ஒன்றிய குழு உறுப்பினர்பேசியபோது ஒன்றிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படுகின்ற அனைத்து வேலைகளையும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு முறையாக தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார், துவார் ஊராட்சியில் உள்ள பள்ளிக்கு போதிய இடவசதி ஏற்படுத்தி போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

ஒன்றிய குழு உறுப்பினர் கலியபெருமாள் பேசுகையில் கந்தர்வகோட்டையில் உள்ள  கால்நடை மருத்துவமனை இயங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனை இயங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், ஒன்றிய குழு உறுப்பினர் வைரக்கண்ணு பேசுகையில் குளத்தூர் நாயக்கர் பட்டி ஒன்றிய குழுவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் போதிய குடிநீர் வசதி மயான கொட்டகை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார், கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அனைத்து துரை அதிகாரிகளுடனும் இணக்கமாக நடைபெற்று மாவட்டத்திலேயே சிறப்பான ஒன்றியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பாராட்டினார்,  கந்தர்வகோட்டையின் தாலுக்கா தலைமை இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதை ஒன்றிய பெருந்தலைவர் துணையோடு மிகச் சிறப்பாக அந்தப் பணி நிறைவேற்றப்பட்டு வருகிறது, இன்னும் 20 ஆண்டுகளில் கந்தர்வகோட்டை பகுதி தண்ணீர் பற்றாக்குறை ஒன்றியமாக மாற இருக்கின்ற ஒரு அபாயகரமான சூழ்நிலை இருப்பதாகவும் அதை போக்குகின்ற வகையில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் இந்த கந்தர்வகோட்டை ஒன்றியத்தை இணைத்து இந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களிலும் ஏரிகளிலும் நீரை தேக்கி அதன் மூலம் நிலத்தடி நீரை உயரச் செய்து இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு முறையான இடம் இன்னும் தேர்வு செய்யப்படாததால் மருத்துவமனையை அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கூடிய விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு தரமான மருத்துவமனை கந்தர்வகோட்டையில் அமைக்கப்படும்  இதற்கு இந்த ஒன்றிய குழுவும் இந்த பகுதி மக்களும் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இறுதியாக பேசிய ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கார்த்திக் மலவராயர், வரலாற்றில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொள்வது தமிழகத்தில் இதுதான் முதல் முறையாக இருக்கும், இந்த கந்தர்வகோட்டை ஒன்றியம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து எல்லா வளங்களையும் பெற வேண்டுமென எங்களோடு சேர்ந்து சட்டமன்றத்தில் எங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்து வைக்கின்ற ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினர் நாம் கிடைக்கப் பெற்று இருக்கின்றோம் , சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவோடு இங்கே பல்வேறு பணிகள் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது,  ஆகவே ஒன்றிய குழுவின் சார்பாக சட்டமன்ற உறுப்பினருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேசினார்,  இங்கே ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் ஒன்றிய குழுவில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள்,  உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் ஊராட்சி ஒன்றியத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என ஒன்றிய குழுத் தலைவர் உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 6