புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுற்று வட்டார கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயனடைவதற்கு ஏதுவாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடுஅரசு கேபிள்டிவி, சிவா டிவி உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வை தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமில் கிட்ட பார்வை, தூர பார்வை, கண்ணில் நீர் வடிதல், கண்ணில் சதை வளர்தல் கண்ணீர் அழுத்தம் மாலைக்கண் ஆகிய நோய்களுக்கு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்பட்ட 180 நபர்களை தேர்வு செய்து அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் ரெத்தினவேல் கார்த்திக் மழவராயர், ஒன்றிய கவுன்சிலர் கோமாபுரம் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, அரவம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருண் பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், சபரி ராஜன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், முகாம் தொடர்பாளர் வினோதகன்,அப்துல்லா கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஷேக் அலாவுதீன், சாரதி உரக்கடை கவிதா சிவா, அபர்னா ஜூவல்லர்ஸ் சரவணா ஸ்டோர் பழனிவேல், எல்ஐசி முகவர் தக்ஷிணாமூர்த்தி, டி எம் எஸ் மளிகை, டி ஆர் ட்ரான்ஸ்போர்ட் தவமணி, அக்கச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பிரசாத் ஸ்டுடியோ நிறுவனர் பிரசாத், கண்ணா ஜுவல்லர்ஸ் நிறுவனர் கண்ணன், வி கே சன்ஸ் நிறுவனத்தினர், தமிழழகன் அரிசி மண்டி நிறுவனர் தமிழழகன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொத்தகம் வெங்கடேஷ், நியூ ஸ்டார் கம்யூனிகேஷன் வினோத், வளர்மதி அம்மாள் திருமண மண்டபம் நிறுவனர் காட்டுநாவல் மூக்கையா தேவர், கணேஷ் பவன் நிறுவனர் அர்ஜுனன் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஐயா கோபாலகிருஷ்ணன், அரசு ஒப்பந்தக்காரர் தெம்மவூர் வல்லரசு, செய்தியாளர் கோமாபுரம் இளையராஜா, பாலமுருகன் ஸ்டுடியோ செந்தில், பூங்குழலி பேன்சி ஸ்டோர் நிறுவனர் ரமேஷ், சக்தி கிராபிக்ஸ் நிறுவனர் சக்திவேல், சிவா டிவி அலுவலர் தமிழ்மணி, புதிய நிலா பிரிண்டர்ஸ் நிறுவனர் சந்திரன்,

ரோட்டரி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிவா டிவியின் கண் சிகிச்சை முகாமிற்கு வருகை புரிந்த சுற்று வட்டார கிராமப்புற மக்கள் முகாம் சிறப்பாக செய்தமைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மேலும் இது போன்ற சமூக செயல்பாடு தொடர்ந்து இந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டனர்.

