புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள 25,850 ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை புதுக்கோட்டை மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் கருணாகரன் வட்டாட்சியர் ராஜேஸ்வரி கூட்டுறவு சங்க கடன் செயலாளர் அழகர் முத்து,திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூபாய் ஆயிரம் ரொக்கம் மற்றும் 6 அடி செங்கரும்பு, தலா ஒரு கிலோ பச்சரிசி, உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை வட்ட வழங்கல் அலுவலர் உத்திராபதி, கிராம நிர்வாக அலுவலர் தமிழழகன்,திமுக நகரக் செயலாளர் ராஜா, நெசவாளர் அணி மாவட்ட துணை செயலாளர் ஜானகிராமன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் இளையராஜா, ஊராட்சி மன்ற உறுப்பினர் செந்தில் மூக்கையன் மற்றும் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.