புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கட்டையகோன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கரந்தமலை சின்னையா ஆலயத்தில் 21ஆம் ஆண்டு யாதவர்களால் கொண்டாடப்படும் பொங்கல் விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் கட்டையகோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.





