கட்சியில் இருப்பவர்களையே வீடியோ எடுத்து மிரட்ட கூடியவர்கள் பாஜகவினர் என அமைச்சர் உதயநிதி விமர்சனம்

கட்சிக்குள்ளேயே இருக்கக் கூடியவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்ட கூடியவர்கள் பாஜக என புகார் கூறினார்.

பாஜக என்றாலே ஆடியோ – வீடியோ கட்சி என்றும், அதில் இருந்தவர்களே 420 கட்சி என கூறி, வெளியேறி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள விழி காணும் நிழற்படம் வரலாற்றின் வழித்தடம் எனும் முதல்வரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பொய் செய்தி என்றார். பாஜக என்றாலே ஆடியோ – வீடியோ கட்சி தான் என கூறிய அவர், கட்சிக்குள்ளேயே இருக்கக் கூடியவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்ட கூடியவர்கள் என புகார் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 5