தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சொக்கம்பட்டி ஊராட்சியில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கடையநல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக மாவட்ட கழகச் செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணமுரளி (எ) குட்டியுப்பா, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அதிமுக மகளிர் அணி துணைசெயலாளர் ராஜலெட்சுமி, மாவட்ட அதிமுக துணை செயலாளர் மாரியப்பன், அவைத்தலைவர் மூர்த்தி, அண்ணா தொழிற்சங்கம் கந்தசாமி பாண்டியன், திருநெல்வேலி மேற்கு மண்டல நிர்வாகிகள், செயலாளர் ராமையா, பொருளாளர் ஆத்மநாபன், விபத்து பிரிவு செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பெருமையா பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.