கடையநல்லூர் நகராட்சி குமந்தபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 65- ஆவது குருபூஜை

தென்காசி மாவட்டம்  கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு குமந்தபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நல அமைப்பின் சார்பாக இந்திய சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 65- ஆவது குருபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு எல்.கோவிந்தராஜன் தலைவர், பொருளாளர் எ. பூ ராஜா, கௌரவ ஆலோசகர்கள்  வி. கணேசன், துணைத் தலைவர் ஆர். கருப்பசாமி, முன்னாள் தலைவர் எஸ். முருகானந்தம், செய்தி தொடர்பாளர் எ. ராஜேஷ், நிதிச் செயலாளர் பிரிவு.சங்கர்,எம். முத்துச்சாமி, சி. குருசாமி, நாராயணன், எம். முத்துசாமி, 4- வது வார்டு அமைப்பு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் நல அமைப்பினர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா.செல்லத்துரை, கடையநல்லூர் நகரச் செயலாளர் எஸ். அப்பாஸ், நகர் மன்றத் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், நகரத் துணைத் தலைவர் காசி, 1 வது வார்டு செயலாளர் காளிமுத்து, கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் ரேவதி பாலீஸ்வரன், முன்னிலையில் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானமும் சிறப்பாக வழங்கப்பட்டது, மேலும் வெளிநாடு வாழ் தேவேந்திர குல வேளாளர், சமுதாய நல அமைப்பு, எல். மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 15 =