தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டி இந்து துவக்க பள்ளியில் திராவிட மாடல் நாயகர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழாவில் புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இலவச கண் சிகிச்சை முகாமை புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுடார்.
இந்நிகழ்ச்சியில் இந்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முனியாத்தாள், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி கண்ணன், மறுமலர்ச்சி திராவிட கழக முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமினை காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் துரைசாமி பாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக கிளை செயலாளர்கள், முன்னாள் கிளை செயலாளர் பெருமாள்சாமி, சமுத்திரகனி, முருகேசன், அவைத் தலைவர் நாகராஜ், முத்துப்பாண்டி, பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், மகேந்திரன், தொமுச. மருதையா பாண்டியன், ஆட்டோ முத்துப்பாண்டியன், முத்துராஜ், தென்காசி பாராளுமன்ற இணையதள ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மஜா கனகராஜ், சிபிஎம் முருகையா, ஆதித்தமிழர் மாடசாமி, புன்னையாபுரம் திமுக நிர்வாகி அய்யனார், பெரிய பாப்பா, சிஐடி குமார், அறிவானந்தம்,முத்துச்செல்வம், அகர்வால் கண் மருத்துவமனை மேனேஜர் ஷேக்அப்துல்லா, மதன், சுப்புலட்சுமி, கௌரி, ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர்.