கடையநல்லூர் அரசு பெண்கள் பள்ளியில் விலை இல்லா இருசக்கர மிதிவண்டி வழங்கும் விழா

கடையநல்லூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா. செல்லத்துரை தலைமையில்+2 படிக்கும் 293 மாணவிகளுக்கு விலை இல்லா இருசக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது.   இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் தனது மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவிகளுக்கு 60 இரும்புபெஞ்ச், டேபிள் பெஞ்ச், வழங்கப்பட்டது இதில் நகரச் செயலாளர் எஸ். அப்பாஸ், நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஆய்க்குடி சேர்மன் சுந்தர்ராஜன், கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், முகைதீன் கனி, காளிமுத்து, மருத்துவர் சஞ்சீவி, வடகரை ஷேக் தாவுது, எட்டாவது வார்டு உறுப்பினர் மாலதி, 13 வது வார்டு திவான் மைதீன், 28 வது வார்டு மாரி, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள், வளர்ச்சிக் குழுத் தலைவர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவிகள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பிட வசதி, சுகாதாரமற்ற நிலையில் பள்ளிவாசலிலே கழிவு நீர் சாக்கடை, டீக்கடை கழிவுநீர்,  மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் நகராட்சி தூய்மை  தொழிலாளர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை மனுவை நகரச் செயலாளர், நகர் மன்ற தலைவரிடம் முன்வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 2