தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாநில அளவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாப் போட்டிகளை நடத்தியது.
மேலும் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் வட்டார அளவிலும் , வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டனர். மொழித் திறனுக்கான மாநில அளவிலான போட்டி திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரியில் வைத்து டிசம்பர் 27 -ம் தேதி நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெற்ற , இணைய கருத்துருவாக்கம் என்ற கணிப்பொறி திறன் சார்ந்த போட்டியில், கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மு. இலக்கியா, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் . மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி என்ற விருதானது தமிழக முதலமைச்சரால் சென்னையில் வழங்கப்பட இருக்கிறது.