கடையநல்லூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட சிங்கிலிபட்டி கிராமத்தில், ரோட்டரி கிளப் ஆப் கடையநல்லூர் மற்றும் சேவை துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

முகாமில் புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் ஆப் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். மருத்துவர்கள் மாரிமுத்து, கலையரசி, உதவி இயக்குனர்கள் திருநெல்வேலி, ஆப்ரா காட் ஜாப்ரி, அசன் காசிம், சிவக்குமார், இம்தியாஸ் அகமது, தனலட்சுமி அருண் பாண்டியன் மருந்து கண்காட்சியில் பங்கேற்றனர். குடற்புழு சிகிச்சையை சென்னை கூடுதல் இயக்குனர் இளங்கோவன் துவக்கி வைத்தார். திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல் தடுப்பூசி சிகிச்சையை துவக்கி வைத்தார்.

சென்னை கூடுதல் இயக்குனர் சுந்தர்ராஜன் தாது உப்பு மருந்து மற்றும் புல் நாற்று  விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.  பசுமாடு கருவுறுதல் சம்பந்தமாக தென்காசி உதவி இயக்குனர் மகேஸ்வரி விளக்கி பேசினார். கால்நடைகள் மடி வீக்கம் சம்பந்தமாக ஜான் சுபாஷ் விளக்கி பேசினார். மருத்துவர் அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2