தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் திடலில் தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச் செயலாளர், டி.டி.வி. தினகரன் ஆலோசனைப்படி முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவின் 75 -ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முந்தினம் நடைபெற்றது.
இதில் ஏழை தாய்மார்களுக்கும், பெரியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகளும், இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன. தலைமை ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னிலை ஹைதர் அலி, சுமதி கண்ணன், கோமதி, அருணகிரி சாமி, சுப்பிரமணியன் சாமி, பாலசுப்பிரமணியன், கற்பகம், குருநாதன், சிறப்புரை கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்கராஜா துணை பொது செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார்யூனியன் சேர்மன், சுப்பையா தலைமை பேச்சாளர், மாவட்ட சார்பு அணி செயலாளர் முருகன், கணேசன், கலா ராணி, குமார், கோட்டைச்சாமி, ராஜேஷ், ரெஸ்கல்லா, பால்பாண்டியன், நாராயண மாரியப்பன், சுரேஷ் பாபு, மக்தூம், தேன்மொழி, தங்கராஜ், காளிதாஸ், வினிதா, சையது அலி, ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, கருப்பசாமி, குழந்தை ராஜா, கண்ணன், கிருஷ்ணசாமி, ராம்குமார், பசும்பொன் மகேஸ்வரன், நகரக் செயலாளர்கள் முத்துவேல், மாரியப்பன் புளியங்குடி, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கடையநல்லூர் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். நன்றியுரை நாட்டாமை வேலுச்சாமி நகர செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75- வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.