தென்காசி மாவட்டம் கடையத்தில் மோடி அரசை கண்டித்தும், ராகுல்காந்தி மீதான ஆணையை திரும்பி பெறக் கோரியும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கியதாக மத்திய செயலகம் அறிவித்தது.
இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ராகுல் காந்தி மீது போடப்பட்ட ஆணையை திரும்பப் பெற கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் கடையம் மத்திய அரசின் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர், என்எஸ்யூஐ தேசிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான மாரிகுமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிமூலம் ,வட்டார மகளிர் அணித் தலைவி சீதாலட்சுமி, வட்டாரத் துணைத் தலைவர் முருகன், மாவட்ட பொது செயலாளர் ராமையா ,தொழிற்சங்கத் தலைவர் அருணாச்சலம், வட்டார பொருளாளர்கள் சாத்தா, மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் பாபு, பழனி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.