கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு சரியாக வராத மாணவனை அரசு பள்ளி ஆசிரியர் அடித்து உதைக்கும் காட்சி : இணையத்தில் வைரலாகும் விடியோவால் பரபரப்பு!!!

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு சரியாக வராத மாணவனை பிரம்பால் அடித்து, கால்களால் உதைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்த காட்சியை படம் பிடித்த மாணவர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 + = 68