கடலூர் அருகே திருவிழாவிற்கு சென்ற பெண் குழந்தைகள் ஏரியில் மூழ்கி பலி

ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவபெருமாள் – கன்னியாகுமரி தம்பதிக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள்கள் இருவரும் பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராமத்தில் உள்ள தங்களது பாட்டி ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், குளிக்க செல்வதாக சொல்லி சென்ற இருவரும் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.; அப்போது திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் முத்துலட்சுமி (17) மற்றும் சிவசக்தி (15) ஆகிய இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சடலத்தை மீட்டு வீட்டுக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். கோயில் திருவிழாவிற்காக வந்த இரண்டு பெண் குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததால் திருமலை அகரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 3 =