கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பதற்கு தமாகா விவசாயஅணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமாகா விவசாயஅணி மாநில தலைவர் துவார் சி.ரெங்கராஜன் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு தமாகா விவசாயஅணி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும். தமிழகத்தில் மக்கள் பிரச்சனை எவ்வளவோ உள்ள சூழ்நிலையில் பலகோடி செலவில் பேனா சிலை என்பது தற்போதைய சூழ்நிலையில் தேவையற்ற ஒன்று குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்க போதுமான வகுப்பறையில்லாத சூழ்நிலை நிலவிகின்ற போது அந்த பணிக்கு செலவிடும் தொகையை பள்ளி மற்றும் இதர காரியங்களுக்கு செலவிடலாமே என்ற கேள்வி எழுகிறது.
உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் கிராமத்தில் உயர்நிலைபள்ளி துவங்கி பல ஆண்டுகள் ஆன சூழ்நிலையில் சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் 100 மாணவ, மாணவிகள் படிப்பதற்கான வகுப்பறையே உள்ளது. பேனா அமைக்க செலவிடும் தொகையில் பள்ளிக்கு தேவையான கட்டிட வசதியை செய்து கொடுத்திடலாம். மாணவர்கள் மழை, வெயிலில், மரத்தடியில் படிப்பதில் மாற்றம் ஏற்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.