ஓபிசியினருக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினால் மத்திய அரசுக்கு ஆதரவு: பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தனது கட்சி மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்திருக்கிறார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தினார்.

ஏற்கனவே சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசு இதற்காக ஏதாவது சாதகமான நடவடிக்கை எடுத்தால், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்கள் கட்சி கண்டிப்பாக ஆதரிக்கும்” என்று மாயாவதி ட்வீட் செய்திருக்கிறார்.