ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது பொருளாளர் தான்ஈபிஎஸ் கடிதம்

.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது. பொருளாளர் மட்டும்தான் என்று தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடந்த 29ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் நீங்கள் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் சட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ள பழனிசாமி தன்னை தலைமை நிலைய செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 68 = 71