
கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து “ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஓணம் பண்டிகை சகோதரத்துவத்தையும், நேர்மறை எண்ணங்களையும், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் விதைக்க கூடியது. இந்த நல்ல நாளில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார் மோடி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்தில் “அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள்! மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.