ஓட்டேரியில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலுார் அருகே ஓட்டேரியில் கனரக வாகனங்களால் விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால், பள்ளி, கல்லுாரி செல்லும் காலை, மாலையில் கனரக வாகனங்களுக்கு அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஓட்டேரி பாலமதி செல்லும் சாலையில் ஜே.சி.பி., வண்டிகள், டிப்பர் லாரிகள் போன்ற வாகனங்களினால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 10 கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், மக்கள் பயன்படுத்தும் கரடு முரடான இச்சாலையில் எந்த நேரத்திலும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி நேரத்தில் ஜே.சி.பி., வண்டிகள், டிப்பர் லாரிகளுக்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 + = 73