
ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வியடைந்த நிலையில் அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் குத்துசண்டை 69 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரை யிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார்.
முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர். காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியான் சின் சேன்னைத் வென்றார் இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் அளிக்கப்பட்டது.