ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்த பெண்

உலக அளவில் மக்களால் பாராட்டப்பட்ட சர்க்கஸ் கலைஞர்களின் கிரேஸ் குட் என்ற பெண் சிறப்பு வாய்ந்தவர்.

அமெரிக்காவை சேர்ந்த 18 வயதில் தனது சர்க்கஸ் பயணத்தை தொடங்கிய இவர் அசாதாரண சாகசங்கள் மற்றும் துணிச்சலான நெருப்பு வளையங்களை செய்து கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்துவார். பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் இவரது சாகச காட்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

தற்போது 30 வயதாகும் கிரேஸ் குட் ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 8 நெருப்பு வளையங்களை தன் உடலை சுற்றி தொடர்ந்து இயக்கி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும் பந்தின் மீது நின்று வியக்கத்தக்க வகையில் 28 ஹூலா வளையங்களை வெற்றிகரமாக சுழற்றி மற்றொரு சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பயனர்கள் பலரும் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.