ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த  7 நபர்களை ஒரே நாளில் ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த   எறையூர் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ் என்பவரை முன்விரோதத்தின் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த   ஞானாதிக்கம் மகன் ஜான்மனோஜ் 29, ஆரோன் மகன் அலெக்சாண்டர் 27, அல்போன்ஸ் மகன் ஜஸ்டின் பவுல்ராஜ் 24. அருலப்பன் மகன்  ரொசாரியோ பிராங்க்ளின் 23,  அந்தோணியார் மகன்  அலெக்சாண்டர் 27, அருலப்பன் மகன் அந்தோணி ரெய்மண்ட் 27,  அந்தோனிசாமி  மகன்  ரூபன்லூர்துராஜ் 28, ஆகியோர் சேர்ந்து வழிமறித்து தடியால் அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்ய முயற்சி செய்து பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இவர்கள் மீது கடந்த 09-ம் தேதி  எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில்  கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு  அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும்  அனைவரும் தொடர்ந்து அதே கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், அடிதடி சண்டை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கி வந்த நிலையில், இவர்கள் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், இவர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்  ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இந்த 7 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அனைவரையும் இன்று உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பொது அமைதியை குலைக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1