ஒரு கோடி பேருக்கு மின் வசதி இல்லை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது. 9 மாதங்கள் கடந்தும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் மக்கள் பலியாகிவிட்டனர்.

ரஷ்யா நடத்திய ஏவுகணை வீச்சில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து விட்டது. தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் மக்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர். இந்த போரால் உக்ரைனில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் மின்சார வசதி இல்லாமல் தவிக்கின்றனர் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் ஓடெசா, சுமி, கிவ், வின்னிட்சியா உள்ளிட்ட நகரங்களில் மின் வசதி முற்றிலும் இல்லை. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுள்ளனர். வின்னிட்சியா, சுமி ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரங்களில் மின் வினியோகத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 + = 75