ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அன்னவாசல் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார வள மையம் அன்னவாசலில் நடைபெற்றது.
வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பள்ளி சிறார் மருத்துவ குழு, வட்டார வளர்ச்சி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதார துறை உட்பட பல்வேறு துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் வளமைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி வரவேற்க, கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர் கூறுகையில்;

பல்துறைகளை ஒருங்கிணைத்து நடைபெறும் இது போன்ற கூட்டமானது மாணவர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வழி வகுக்கும் கூட்டமாகும். குறிப்பாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் அவர்களுக்குரிய உதவித்தொகைகளை பெற்றுக் கொடுத்தல், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென தனித்துவமான எண்ணும் எழுத்தும் கையேடு, இலுப்பூரில் இயங்கி வரும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தின் செயல்பாடு போன்றவை பாராட்டுக்குறியது என்றும் சுகாதாரத் துறையில் மேற்கொண்டு வரும் டெங்கு விழிப்புணர்வுப் பணி மாணவர் நலனில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் பேசினார்.மேலும் மாதத்தில் முதல் திங்கள் இறை வணக்க கூட்டத்தில் வேற்றுமையை ஒழிப்போம் அதனைத் தொடர்ந்து சிந்தனையில் மாற்றம் சமூகத்தில் ஏற்றம் என்ற முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டது. ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சியாமளா, நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் கலா, ஷெலின்,சுகாதார ஆய்வாளர் தமிழரசன் பள்ளி சிறார் மருத்துவ குழு இலக்கியா மருந்தாளுநர் லலிதா, சிறப்பு பயிற்றுநர்கள் கவிதா மனோகரன் ஜோசப் கில்பர்ட் மீனாட்சி, வைரமுத்து, இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி போன்றோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார்.