ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைப்பெறும் 46-வது புத்தகக் கண்காட்சி – பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துக்கள் உங்களுக்காக

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி-6-ம் தேதி தொடங்கி வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பல லட்சக்கணக்கான புத்தககங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட்டவர்களில் ஒரு சிலர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..

குரு.தனசேகரன் கல்வியாளர், புத்தக ஆர்வலர்-

குரு.தனசேகரன் கல்வியாளர்

எந்த நிறுவனமானாலும் அதில் பணிபுரியும் நபர்கள், நிறுவனர் அனைவருக்கும் புத்தக வாசிப்பு அவசியம் தேவைப்படும். ஏனென்றால், நம்முடைய வளர்ச்சிக்கு முக்கிய கருத்துகள் கூட சில புத்தகங்களில் கிடைக்கும். என்னைப் பொறுத்த வரைக்கும் சிறு வயது முதலே பாடப் புத்தகங்களை தாண்டி, அரசியல், கல்வி, மருத்துவம், ஆன்மிகம், இலக்கியம் போன்ற அனைத்து புத்தகங்களையும் தேடி, தேடிப் படிப்பேன். சென்னை, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களின் நாள்களை அறிவித்தவுடன் என்னுடைய மனதில் ஏற்றி விடுவேன். அந்த வகையில் அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். 1,000அரங்குகளிலும் என்னைப் போன்ற நபர்களைத் தான் அதிகமாக பார்க்க முடிந்தது. இளைய சமுதாயத்தை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் தெரிந்தது. நானாக நினைத்துக் கொண்டேன் புதிதாக வெளிவந்த திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விட்டனர் என்று. வாழ்வில் ஒவ்வொரு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சித் தரக்கூடிய விஷயம் என்னதாக இருந்தாலும் புத்தகங்களும், வாசிப்பும் மிகவும் அவசியம். அதைவிட வாசித்து நீங்கள் பெற்ற அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும். இல்லாவிட்டால் பத்திரிகைகளிலோ, சமூக வலைத்தளங்களிலோ பதிவு செய்வது மிகவும் முக்கியம். நாம் மறைந்தாலும். நம்முடைய எழுத்து, பதிவுகளும் என்றும் நிலைத்து நிற்கும். வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் எப்படியோ அது போலத்தான் நாம் புத்தகக் திருவிழாக்களையும் பார்க்கிறேன்.  

முனைவர்- ஸ்ரீவித்யா- சென்னை

முனைவர்- ஸ்ரீவித்யா

புத்தகம் எனது பார்வையில் புது ூ அகம் புத்தம் புதிய தகவல்களை நம் அகத்துள்ளே புகுத்தும் கூரிய ஆயுதம். நம் எண்ணங்களை சீர்படுத்தி நம்மை செம்மையாக செயல்பட வைக்கும். பெட்டகம். புத்தகம் என்பது நம்மை ஒரு சிறந்த சிந்தனையாளராக மாற்றும் வல்லமை படைத்தது. நித்தம் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியில் பயணிக்கும். நாம் புத்தகங்களை தொட்டு வருடி படித்து அனுபவிப்பது அலாதி சுகம். தினமும் ஒரு நேரமாவது படிக்கும் போது நம் எண்ணங்களும் செம்மைப்படுகிறது. புத்தகங்கள் பல, பல வண்ணங்களிலும் வடிவமைப்புகளிலும் வேறு பட்டாலும், நம் அறிவு தேடலுக்கு விருந்தாக அமையும். புல அறிஞர்களின் வெற்றி பக்கங்களை வாசிக்கும் போது, புத்தகங்களின் பங்கு கண்டிப்பாக இருக்கும். புத்தம் புதிய மணத்துடன்; அறிவின் ஊற்றாக எக்காலத்திலும்   இருப்பது புத்தகம் மட்டுமே.. நிறைய புத்தகங்களின் தலைப்புக்கு அதிகமான விளம்பரங்கள் இருக்கிறது, அதை நம்பி அப்புத்தகத்தை இணைய வழியாக வாங்கினால் சில நேரங்களில் ஏமாற்றம் அடைந்து விடுகிறோம். இது போன்று கண்காடசிக்கு நேரடியாக வருகை தந்து, அப்புத்தகத்தை அனைத்து பக்கம் புரட்டிப் பார்த்தால் அதில் உள்ள விஷயங்கள் உடனே தெரிந்து விடுகிறது. இதனால் மன ஆறுதலும் கிடைக்கிறது என்றே சொல்லாம்.  

பெ.கிலோனா மணிமொழி- பட்டிமன்ற பேச்சாளர், கட்டுரையாளர்

பெ.கிலோனா மணிமொழி

15-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கொல்லரான ஜோஹன்னஸ் கூட்டன்பர்க் என்பவர் உருவாக்கிய பிரித்தெடுக்கும் தனித் தனி அச்செழுத்து முறை உலக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1440-ஆம் ஆண்டு கூட்டன் பர்க் உருவாக்கிய அச்சு முறை அதுவரை பயன்பாட்டில் இருந்த அச்சு முறைகளிலேயே மிகவும் எளிதானதாக, விலை குறைவானதாக, நல்ல விளைவைக் கொடுத்ததாக இருந்தது. அவர் தனது அச்சுக் கூடத்தில் முதலில் உருவாக்கிய புத்தகம், கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிள என்பதுவே. இதன் பிரதிகள் இன்றும் ஜெர்மனி, லண்டன் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவர் உருவாக்கிய அச்சு முறையால் அச்சிடுதல் என்பது எளிதாகப் போனதுடன், புத்தகங்களின் விலையும் குறைவாகிப் போனது. அதனால் புத்தகங்கள் தேவலாயங்களை விட்டும், அரச மாளிகைகளை விட்டும் வெளியே வரத் தொடங்கியது. அதுவரையிலும் செல்வந்;தர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த புத்தகங்கள் பொது மக்களுக்கும் கிடைக்கத் தொடங்கின. அறிவு பரவத் தொடங்கியது. மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். உலகமெங்கும் அச்சிடுதல் பரவத் தொடங்கியதால் அந்தந்ந மொழிகளில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டன.

வி.காதம்பரி இல்லத்தரசி சென்னை

வி.காதம்பரி இல்லத்தரசி

நல்ல எழுத்தாளன் என்பவன் எப்பொழுதுமே ஏமாற்றத்திற்கு உள்ளாகுபவனாகவே உள்ளான். திருவள்ளுவர் தமது நூலான திருக்குறளை அரங்கேற்றம் செய்ய முற்பட்ட போது, சங்கப் புலவர்களால் மறுக்கப்பட்டதும். பிறகு மதுரை பொற்றாமரைக் குளத்தில் சங்கப் பலகை அதனை ஏற்றுக் கொண்டதும் மரபுவழிக் கதையாகும். இந்;தியாவின் தேசியக் கீதத்தை இயற்றிக் கொடுத்த, நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூர், தொடக்கக் காலங்களில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளார். அன்றைய பள்ளி மாணவர்களுக்கான தேர்வுத் தாளில் பிழைகளைக் கண்டுப்பிடித்துத் திருத்துக என்ற பகுதியில் கவிஞர் தாகூரின் கவிதைகளை வெளியிட்டுக் கேவலப் படுத்தியுள்ளனர். அவரது கவிதைக்கு அந்நிய நாட்டார் மரியாதை கொடுக்கத் தொடங்கிய பிறகு தான் நம்மவர்கள் மதிக்கத் தொடங்கினர். தான் வாழ்ந்த காலத்தில் இதே தமிழ்நாட்டில் தமது கவிதைகளை அச்சில் கொண்டு வருவதற்குப் பகல் கனவு கண்டு பலிக்காமல் போனவர்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இன்று ஒரு திரைப்படத்தில் பாடல் என்ற பெயரில் தமிழை கொலை செய்பவர் கவிஞனாகிறார். ஆகவே தமிழை சரியாக உச்சரிக்கவும். எழுதவும் முக்கிய புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். முனைவர் சுடர்க்கொடி கண்ணன்; எழுதிய மாமனிதர் புக்கர் தி.வாஷிங்டன் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தேன். அந்தப் புத்தகத்திறகு ஆஸ்திரேலியா அடிலைட் தமிழ்ச்சங்கத்தின தலைவர் ஜோசப் சேவியர் தன்னுடைய வாழ்த்துரையில் வளர்வதற்கு அரசியலும், வளர்ந்து விட்டால் அரசியலும் வருவது பொதுவான நிலை. புக்கரின் பேச்சாற்றலை விலைக்கு வாங்க வந்த அரிசியல் வாதிகளிடம் என் ஆற்றல் அனைத்தையும் அடிமை மக்களை உயர்த்தவே பயன்படுத்துவேன் என்ற முடிவே அவரை முடிசூடா மன்னனாக்கியது. காந்தியும அப்படித்தான் வாழ்ந்தார். மேலும் இப்புத்தகத்தில் பல சிறப்பான தமிழ் வார்த்தைகளை ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது அவரின் வளர்ச்சி அடைந்த தமிழ்ச் சமூகம் புதிய எழுத்தாளர்களை அதிகமாக உருவாக்கியுள்ளது என்பதை இப்புத்தகத்தில் பாரக்க முடிந்தது.

     சிறப்பு தொகுப்பு பொ.ஜெயச்சந்திரன் -திருவரங்குளம்

பதிப்பாளர்கள் – எழுத்தாளர்கள் – வாசகர்களின் மிகப்பெரிய கூடலான சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான பொற்கிழி விருதுகளை வழங்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 5