ஒபிஎஸ் மனைவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான்

ஒபிஎஸ் மனைவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தில் தொண்டமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருகினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமியின் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  தங்கள் துணைவியாரின் மறைவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக பிரார்த்தனை மேற்கொள்கிறோம். இந்த கடினமான சூழலில் இருந்து தங்கள் குடும்பம் மீண்டு வரவும் பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2