ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு; குவியும் சுற்றுலாப்பயணிகள்

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கொட்டும் அருவியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து வழக்கம் போல் வரும் சுற்றுலா பயணிகளை விட தற்போது அதிகமானோர் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். ஐயப்பன் கோவிலுக்குச் செல்வோர் இங்கு வந்து ஆனந்தந்தமாக குளித்து மகிழ்கின்றனர். ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வருகை அதிகரிப்பால், தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =