ஏழை மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

இந்திய மாணவர் சங்கத்தின் முயற்சியால் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஐக்கிய நலக்கூட்டமைப்பின் நிர்வாகியும், நாணயவியல் கழக நிறுவனருமான எம்.பஷீர்அலி, குறும்பட இயக்குனர் இளங்கோ, நன்கொடையாளர்கள் அப்துல்அஜீஸ், அப்துல் மைதீன் ஆகியோரின் உதவியுடன் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்கள் 15 பேரின் குடும்பங்களுக்கு இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்தனன், பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் புதுகை செல்வா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் துரை.அரிபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.