ஏற்காட்டில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பங்கள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் இருக்கும் மின் கம்பம் பழுதடைந்த நிலையிலும் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமலும் இருக்கின்றது.

இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த மின்கம்பத்தை கடந்தே செல்ல வேண்டும். வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் சிறு சிறு அதிர்வினால் கூட மின்கம்பம் சாய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் மின் கம்பம் அருகில் பழமையான மரங்கள் இருப்பதாலும் காற்று வேகமாக அடிப்பதன் காரணத்தினால் கூட கிளைகள் இந்த கம்பத்தின் மீது விழுந்தாள் சாலையில் செல்வோர் மீது மின்கம்பம் சாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் கூட உள்ளது .

இந்த கம்பத்தை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர் இது மட்டுமில்லாமல் ஏற்காட்டில் கிராமப்புறங்களிலும் ஆங்காங்கே மின்கம்பங்கள் பழுதடைந்தும் சாய்ந்த நிலையிலும் உள்ளது இது மட்டுமில்லாமல் குறிப்பாக எம்ஜிஆர் நகர் எனும் கிராமத்தில் மின்சாரம் சீராக இல்லாமல் குறைந்த அளவு மின்சாரம் வருவதால் மின்சாதன பொருட்கள் அதிக அளவு பாதிப்படைகிறது என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஏற்காடு மின் துறை அதிகாரிகளுக்கு இதுபற்றி புகார் கொடுத்தும் எந்த ஒரு பலனும் அளிக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.