ஏகனிவயல் பள்ளி மாணவர்களுக்கு பால், பிரட்,முட்டை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கி அருகே ஏகனிவயலில் உள்ள தூய மரியன்னை அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு பால், பிரட், முட்டையை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, கஜா புயல் தாக்குதல், கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகிய காலங்களில் மக்களை தேடி பல்வேறு உதவிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தில் உள்ள தூய மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பால், பிரட், முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை புதுக்கோட்டை மாவட்ட தலைவரும், புதுக்கோட்டை பெருநகர் மன்ற உறுப்பினருமான பர்வேஸ் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆண்ட்ரூஸ் தலைமையில் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், நகர இளைஞரணி செயலாளர் அருண், ராஜேஷ் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + = 20