எஸ்.டி.பி.ஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுவில் 2021-2024ம் ஆண்டுக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

எஸ்.டி.பி.ஐ கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.

இதில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநில செயலாளர் சபீக் அஹமது மற்றும் புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்ட தலைவர் சையது அகமது ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்.

கட்சியின் மாவட்ட செயலாளர் ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமை உரை நிகழ்த்தினார்.

இப்பொதுக்குழுவில் 2018-2021 ஆண்டுக்கான செயற்பாட்டறிக்கை மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலியால் தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. ஜனநாயக முறைப்படி தேர்தல் அடிப்படையில் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மேற்கு  மாவட்ட புதிய மாவட்ட தலைவராக ஸலாஹூதீன், மாவட்ட துணைத்தலைவராக மொய்தீன் தாஹா, பொதுச்செயலாளராக ஜகுபர் அலி, மாவட்ட செயலாளர்களாக ஜியாவுதீன் மற்றும் வாசிம் அக்ரம், பொருளாளராக ஹசனுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக அப்துல் மஜீத், அபுபக்கர் சித்திக் மற்றும் ஆதம் பாவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினராக முஹம்மது அன்சாரி தேர்வு செய்யப்பட்டார். இறுதியாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகுபர் அலி நன்றி கூறினார்.