பேக்கரி உலகின் அரசன் என்று சொல்லப்படும் புதுக்கோட்டை பேக்கரி மஹராஜின் புதுப்பிக்கப்பட்ட புதிய ஷோரூம் இன்று மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் பேருந்து நிலையத்திற்கு எதிரில் எஸ்விஎஸ் வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பேக்கரி மஹராஜ் கிளை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் அதன் உள்கட்டமைப்புகள் மக்களை எளிதில் கவரும் வகையில் அனைத்து பேக்கரி தயாரிப்புகளும் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலையமாக இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேக்கரி மஹராஜ் நிர்வாக இயக்குனர் அருண் சின்னப்பா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புதுக்கோட்டை எஸ் வி எஸ் குழுமத்தின் சேர்மன் பெரியவர் வெங்கடாஜலம் குத்துவிளக்கேட்டை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பேக்கரி மஹராஜ் குழுமத்தின் அனைத்து அங்கத்தினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




