புதுக்கோட்டையில் உள்ள எல்லைப்பட்டியில் இல்லம் தேடி கல்வி மையத்தின் சார்பில் பொங்கல் விழா ,கலைவிழா விழா,மற்றும் இல்லம் தேடி கல்வி மைய இரண்டாமாண்டு மைய தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவனது இல்லம் தேடி கல்வி திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவரும் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்தனர்.பின்னர்
இரண்டாமாண்டு தொடக்க நாள் நிகழ்வை கொண்டாடும் விதமாக கேக் வெட்டினர்.முடிவில் மைய மாணவர்களின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எல்லைப்பட்டி
பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் ஆதி திவ்யா ஏற்பாட்டின் பேரில் ஜனனி சேது,காவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.