எல்பிஜி இணைப்பு பெற மிஸ்டு கால் சேவை

மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கும் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடெங்கிலும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா, மூத்த குடிமக்களுக்கும் ஊரகப் பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் நன்மை பயக்கும் எனத் தெரிவித்தார். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே இரட்டை இணைப்பு பெறும் வசதியையும் வைத்யா தொடங்கி வைத்தார்.