எலிசபெத்தின் ராணி இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் 96-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 − = 84