கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜின் உத்தரவின்படி,
உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பொறுப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளர்
பாலசுப்பிரமணியனின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி முக்கிய
இடங்களில் தற்காலிக தடுப்புச் சுவர் அமைத்து விபத்துகளை தடுக்கும் விதமாகவும், மேலும்
உட்கோட்டம் முழுவதும் இரவு நேர பணிகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டது, இந்த
நிலையில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட
எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் தலைமையில், காவலர்கள்
விஜயகுமார், கோவிந்தன், மணிகண்டன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் எங்கள்துறை,
பயிற்சி உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் எலவனாசூர் கோட்டையில் இருந்து
திருக்கோவிலூர் செல்லும் சாலையில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த பொழுது
அதிகாலையில் அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக இரண்டுசக்கர வாகனத்தில் வந்த
இளைஞரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது, குஞ்சரம் கிராம வயல்
வெளிப்பகுதியில் மயில்களை வேட்டையாடி, இரண்டு மயில்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கி
வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் இரண்டு சக்கர வாகனம், நாட்டுத் துப்பாக்கி, மயில்கள் அனைத்தையும் பறிமுதல்
செய்து அவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேலும் விசாரணை
மேற்கொண்டதில், அவர் எறையூர் பாளையம் பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன்
பவுல்அமல்ராஜ் வயது 21 என்பது தெரியவந்தது, தொடர்ந்து வாலிபர் மீது வழக்கு பதிவு
செய்து கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு மயில்களையும் உளுந்தூர்பேட்டை
வனச்சரக அலுவலர் ரவி மற்றும் வனக்காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.