கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் ஆலோசனைப்படி, எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமால் தலைமையில் காவலர்கள் எறையூர் அடுத்த கூத்தனூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்த பொழுது ஆண்டவன் தோப்பு அருகே கத்தியுடன் ரவுடிசம் செய்து கொண்டிருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான எறையூர் பாளையத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கொய்யா தோப்பு என்கிற அலெக்சாண்டர்(27) என்பவரை கைது செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு சிறைச்சாலையில் அடைத்தனர்.