எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை அவசியம்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி அறைகூவல்!

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார். இம்மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதையடுத்து, ஜி-20 மாநாட்டு நடைபெறும் பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு இன்று பிரதமர் மோடி சென்றார்.  அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படும். உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது. எரிசக்தி விநியோகத்தில் தடையை ஊக்குவிக்க கூடாது, எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை அவசியம். பசுமையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.

உக்ரைனை இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும். கடந்த நூற்றாண்டில் 2ம் உலகப்போர் பேரழிவை ஏற்படுத்தியது. 2ம் உலகப்போருக்கு பின் தலைவர்கள் அமைதிப்பாதைக்கு திரும்ப தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஓவ்வொரு நாட்டிலும் ஏழைக் குடிமக்களுக்கான சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்வே அவர்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கிறது. எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாட்கள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது. எரிபொருள் சந்தையில் நிலைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 − = 78