என்னும் எழுத்தும் திட்ட  பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு மேற்கொள்ளும் ஆய்வினை  கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சிமாவட்டம், திருநாவலூரில்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநாவலூர் வட்டார சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை வைத்து கொண்டு ஆய்வு செய்யும் பணியினை உடனே கைவிட வேண்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் ஜெயக்குமார் தலைமையில்,வட்டார செயலாளர் வெங்கடேசன் கண்டன உரை நிகழ்த்தினார், வட்டார துணை தலைவர் கோபிநாதன் ஆசிரியரின் மன உளச்சல் பற்றியும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களை வைத்து மேற்கொள்ளும் ஆய்வில் ஏற்படும் குளறுபடிகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்,இவர்களை தொடர்ந்துசிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் அண்ணாமலை  கண்டன பேருரை ஆற்றினார், இறுதியாக வட்டார பொருளாளர் ஜான்சன்  நன்றி கூறினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணை பொறுப்பாளர்கள், மாவட்ட பொதுகுழு உறுப்பினர்கள், மகளிர் அணி தலைவர், செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன  முழக்கமிட்டனர்.