எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மார்ச் 9-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முடிவுகள் என்பது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில்  வரும் 9-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிப்பார் எனவும் மற்ற மூத்த நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் மாவட்ட கூட்டத்திற்கான அழைப்பு என்பது கொடுக்கப்பட்டு வருகிறது. தவறாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்த படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டமாகும். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தோல்வி குறித்து பல்வேறு நிர்வாகிகள் கேள்வி எழுப்பலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 + = 43