எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேச்சு

எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அல்லது அவரது அணியை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்வார்களா? என்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைப்பாளருக்குத் தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் உழைக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 65 = 68