எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதவி ஏற்க பொன்னேரி தர்காவில் பிரார்த்தனை

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பதவி ஏற்று மக்கள் பணி ஆற்ற வேண்டும் என, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அன்லையத் அத்தாவுல்லாஹ் ஷா காதிரி தர்காவில் அ.தி.மு.க., சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், பொன்னேரி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, துணைச் செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான நாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் தேவி சங்கர், விவசாயப்பிரிவு மங்கலம் வெங்கடேசன், வக்கீல் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

பிரார்த்தனை நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

33 + = 40