ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களை பணி நீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபிட் தனது தலைமையகத்தில் உள்ள உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியை செய்து வரும் 100 ரோபோக்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. சுமார் 100 ரோபோக்கள் இந்த வேலையை செய்து வருவதாக தகவல் வெளியாகியது. ரோபோக்கள் எந்த மாரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டன. இந்நிலையில், செலவைக் குறைப்பதற்காக உணவு விடுதி மேசைகளைச் சுத்தம் செய்யவும், குப்பைகளைத் தனித்தனியாகவும், கதவுகளைத் திறக்கவும் பயிற்சி பெற்ற ரோபோக்களை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தொடர்பு இயக்குனர் டெனிஸ் காம்போவா தெரிவிக்கையில், “தினசரி ரோபோக்கள் இனி எழுத்துக்களுக்குள் தனித் திட்டமாக இருக்காது. சில தொழில்நுட்பங்களும் குழுவின் ஒரு பகுதியும் கூகுள் ரிசர்ச்சில் இருக்கும் ரோபாட்டிக்ஸ் முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள டுவிட்டர், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ போன்ற நிறுவனங்கள் உட்பட தொழில்நுட்பத் துறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செலவுகளைக் குறைக்க கடந்த ஆண்டு முதல் பணிநீக்கங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 + = 87