ஊட்டியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவில் மாணவர்கள் அபார வெற்றி

ஊட்டியில் அண்ணா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சவுத் இந்தியா அளவிலான சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவிலை சேர்ந்த 11 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மாஸ்டர் சரவணன் அவர்கள் தலைமையில் கீழ் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களில் முதல் இடத்தில் ஆவுடையார்கோயில் பகுதியைச்  சேர்ந்தஆர்த்தி, கனிஷ்கா, முத்து இருளப்பன், ஜனனி, மோனிஸ்கான் ஆகிய மூன்று மாணவர்கள் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் இரண்டு பேரும் சேர்ந்து மொத்தத்தில் ஐந்து மாணவர்கள் போட்டியில் தேர்வு பெற்றது மிகுந்த பெருமையை ஏற்படுத்தியுள்ளதாக சிலம்ப பயிற்சியாளர்கள் உட்பட ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் பெருமை கொள்கிறார்கள். இது போன்று அனைத்து பயிற்சிகளிலும் சான்றிதழ் உட்பட பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று ஆவுடையார்கோவில் பகுதி பொதுமக்கள் விரும்புகிறார்கள்.