கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள வட்டார வளமையத்தில்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கி கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள்செல்வம் துவக்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளராக பகுதி சுகாதார செவிலியர் வசுந்தரகுமாரி கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார். பயிற்சியில் மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், அவர்களுக்கான பயிற்சி அளித்தல், உதவி உபகரணங்கள் அளித்தல் மற்றும் அரசின் சலுகை பெறுதல் பற்றிய கருத்துக்கள் விளக்கப் பட்டன. இப்பயிற்சியில் மாற்றுத்திறன் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல், காசிலிங்கம், சாந்தகுமாரி, சரிதா, ரம்யா, ரேஷ்மா, சுரேஷ், ஆறுமுகம், சிறப்புப் பயிற்றுநர்கள் கோமதி, ஜானகிராமன், ராஜலட்சுமி, சரண்யா, பிசியோதெரபி ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.